அமெரிக்கா இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் நேற்று முன்தினம் (10) உள்ளுர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக பொலிசருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இரண்டு பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

tamilcnn.lk

இந்த சம்பவம் நடந்து அடுத்த சில நிமிடங்களில் பெயிண்ட்ஸ் வில்லேயில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்ப் மூன்று பேர் குண்டு பாய்ந்து இறந்து கிடந்துள்ளனர்.

இந்த இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களையும் ஒரு நபர்தான் நடத்தி இருப்பார் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்