காளிதாஸின் ‘பூமரம்’ பூப்பது உறுதி

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளத்தில் ‘பூமரம்’ என்கிற படத்தில் அறிமுகமாக இருக்கிறார். சோதனை என்னவென்றால் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகப்படமாக நடித்த ‘ஒருபக்க கதை’ படத்தை போலவே இந்த பூமரம் படமும் எல்லா வேலைகளும் முடிந்து கடந்த 2016 இறுதியிலேயே வெளியாகும் என சொல்லப்பட்டாலும் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.

tamilcnn.lk

இத்தனைக்கும் இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைன், நிவின்பாலியை வைத்து தொடர்ந்து இரண்டு நூறுநாள் ஹிட் படங்களை கொடுத்தவர். எப்படியோ ஒருவழியாக ‘பூமரம்’ வரும் மார்ச்-9ஆம் தேதி ரிலீஸாகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.. இந்த தேதியும் தள்ளிப்போகாமல் இருந்தால் சரிதான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்