பொலன்னறுவையில் பிள்ளையாரைப் பார்த்து வியந்து போன ஜனாதிபதி மைத்திரி!!

TAMILCNN.LK

பொலன்னறுவையில் உள்ள கைவினை பொருள் கடை ஒன்றுக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை ஒன்றை பார்த்து பிரம்மித்துப்போயுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான சனிக்கிழமை, தேர்தலில் வாக்களித்து விட்டு திரும் போது பொலன்னறுவை, அதுமல்பிட்டிய என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கைவினை பொருள் கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

அந்த கடையின் உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறித்த கடையில் மிகவும் அழகாக, நேர்த்தியாக செய்யப்பட்ட பொருட்கள், சிலைகள் என்பவற்றை பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை ஒன்றையும், பௌத்த பிக்குகளின் சிலைகளையும் பார்வையிட்டதுடன், அவற்றின் கலைநயத்தைக் கண்டு வியந்துபோயுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்