மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்; அதனை நாங்கள் பாதுகாப்போம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் சில இடங்களில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கணிசமான மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். அந்த ஆதரவை நாம் முழுமனதுடன் ஏற்கின்றோம். மக்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

tamilcnn.lk

தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இது ஓர் உள்ளூராட்சி சபைத் தேர்தலென்றாலும் நாடாளுமன்றத் தேர்தலைப்போல கொள்கைகள் மற்றும் கட்சி என்பனவற்றைப் பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான இடங்களில் கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளது. சில இடங்களில் சிறு பிரச்சினைகள் இருக்கலாம்.

ஆனால், ஒரு பெரிய பாதிப்பாக அவற்றை நான் காணவில்லை. மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை நாங்கள் பாதுகாப்போம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்