அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கொள்ளும்

(க.கிஷாந்தன்)

இந்த நாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கொள்ள கூடியவகையில் யார் உடனாவது கைகோர்த்து ஆட்சிகளை பிடித்துக்கொள்வது அவர்களின் விளையாட்டாகும். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதும் இல்லை என அட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னால் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.

tamilcnn.lk

இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய நுவரெலியா மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியது. நுவரெலியா மாநகர சபை தனியாட்சியாகவும், மஸ்கெலியா பிரதேச சபை, அட்டன் டிக்கோயா நகர சபை, நுவரெலியா பிரதே சபை ஆகியவற்றை கைப்பற்றிருந்தது.

ஆனால் தற்பொழுது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த சட்டத்தின் ஊடாக இவர்கள் இவ்வாறு இந்த சபைகளை கைப்பற்றியுள்ளார்கள் என்பது எனக்கு தெரிந்த சட்டத்தின் படி தெரியவில்லை. மாறாக அட்டன் டிக்கோயா நகர சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகியவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்வதற்கு நடவடிக்கைகளை உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று நுவரெலியா பிரதேச சபையின் ஆட்சியையும் கைப்பற்றும். ஏனைய சபைகளை கைப்பற்றுவதற்கு மாற்று கட்சிகளுடன் உயர் மட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நூற்றுக்கு 52 வீத வெற்றியினை சபையில் பெற்றிருந்தார். இதனை அந்த சபையின் தலைவர் அல்லது உப தலைவர் ஊடாக யார் ஆட்சியமைத்து தொடர்பாக தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களை வைத்துக்கொண்டு ஒரு கட்சியில் இணைந்து ஆட்சியை பிடிப்பது இவர்களின் தேர்தல் கால விளையாட்டாகும்.

ஆனால் மஸ்கெலியா பிரதே சபை, அட்டன் நகர சபை ஆகியவற்றை தனி அதிகாரத்துடன் நாம் ஆட்சியமைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்