இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் மக்களின் கருத்துக்கள்

மக்கள் – கொட்டகலை இராமலிங்கம் காந்தி

மலையக மக்களினுடைய தனி பாதுகாவலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த நாட்டில் யுத்தம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தாலும், முற்றுமுழுதாக மலையக மக்களே இதில் பாதிக்கப்பட்டனர்.

tamilcnn.lk

இந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் அபிவிருத்தியை மஹிந்த முன்னெடுத்தார். மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவின் அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகள் வீதி புனரமைப்பு போன்ற அபிவிருத்திகளை முன்னெடுத்ததோடு, மூவாயிரத்துக்கு அதிகமான ஆசிரியர்களையும் உருவாக்கியது. மலையகத்திற்கு அபிவிருத்தி என்று ஒன்று நடைபெற்றிருந்தால் அது இ.தொ.கா மூலமாக தான். இது சரித்திரம் வாய்ந்த கட்சியாகும்.

நேற்று வந்தவர்கள் அயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதாக தெரிவித்தனர். ஆனால் இதன் ஏமாற்றத்தில் பாதிக்கப்பட்டது. மலையக பெருந்தோட்ட மக்கள் தான்.

இன்று பிணைமுறி விவகாரத்தில் சிக்கி தவிக்கும் இவர்கள் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி பணத்தை எடுத்து விட்டதாக கூறுகின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவதும் நாம் தான்.

ஆகையால் மஹிந்த ராஜபக்ஷ அவ்ரகளின் சேவை தான் கூடுதலாக மலையகத்தில் இடம்பெற்றிருப்பதை நினைத்து ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என நாடளவீய ரீதியில் மஹிந்தவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவையும் ஆதரித்து வாக்களித்தோம். காங்கிரஸ் மலையக மக்களுடைய தனி பாதுகாவலன் என்பதை தெரிவிக்கின்றேன்.

மக்கள் – தலவாக்கலை விமலேந்திரன்

மஹிந்த ராஜபக்ஷ இனவாதி என்று ஒதுக்கி வைத்த அவரை இன்று அவரை மக்கள் வாக்களித்து மேலே கொண்டு வந்துள்ளனர். இவரோடு கைகோர்த்து இ.தொ.கா நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

tamilcnn.lk

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு இது நன்மையாக அமையும் என்றால் இதனை நாம் வரவேற்கின்றோம். உள்ளுராட்சி சபைகள் பலவற்றில் அதிகமாக மஹிந்த அணியினர் வெற்றியீட்டு உள்ளனர்.

அதேபோன்று மலையகத்தில் நுவரெலியா பிரதேசத்திலும் அவர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அவர்களோடு கைகோர்க்கும் இ.தொ.கா பெருந்தோட்ட மக்களுக்கு பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்கள் கைகோர்த்தது கண்துடைப்பு விடயமாக மாறிவிடும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்