வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (12) மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

விருந்தினர்கள் மாலை போட்டு பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தேசியக்கொடியை வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், வடக்கு மாகாண கொடியை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், வவுனியா தெற்கு வலயத்தின் கொடியை மு.ராதாகிருஸ்ணனும் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியபிரமாணம் விழையாட்டு வீரர்களால் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். விழையாட்டில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்