கலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3

விமல் சந்தானம் நடித்த ‘கலகலப்பு’ படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றயடைந்ததைத் தொடர்ந்து ‘கலகலப்பு-2’ படத்தை இயக்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது.

tamilcnn.lk

கடந்தவாரம் வெளியான கலகலப்பு – 2 படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைகாட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி..

அப்போது பேசும்போது இந்த படத்தின் மூன்றாம பாகம், நான்காம் பாகம் என்று கலகலப்புகள் தொடரும் என்று கூறினார். அதன் அர்த்தம்… கலகலப்பு -2 படம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் விரைவில் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.

‘கலகலப்பு-3’ படத்தில் ஜெய், ஜீவா இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதோடு, மிர்ச்சி சிவாவும் நடிக்கிறாராம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்