33 வருட வைத்திய சேவைக்கு கௌரவம்

அனார்கலி

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் 33 வருட காலம் சேவையாற்றிய பதிவு வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.ஜே சலீம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூரில் இடம்பெற்ற இந்த சேவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துறைத் தலைவர் சபீனா காஸ்ஸாவி,நிந்தவூர் மத்தியஸ்த சபைத் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி திருமதி சலீமை கௌரவித்ததுடன், பிரதி சுகாதார அமைச்சர் எம்.பைஸால் காசிம் நினைவுச் சின்னமும் வழங்கினார்.

டாக்டர் திருமதி.சலீம் சேவையைப் பாராட்டி அதிதிகள் உட்பட பலரும் உரையாற்றினார்.
டாக்டர் திருமதி.சலீம் யாழ்ப்பாணம் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்