விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, தலைவராக நியமிக்க முடியாது; தேர்தல்கள் ஆணையம்

உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார்.

tamilcnn.lk

உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, தேர்தல்கள் ஆணையாளரிடம்  வினவிய போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

உள்ளுராட்சி சபையொன்றுக்கான தேர்தலில் வட்டாரமொன்றில் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்ற ஒருவரைத்தான், அச் சபையின் தலைவராக தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் விபரித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்