இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று மகா சிவராத்திரி விழா …

அலுவலக செய்தியாளர்:காந்தன்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று மகா சிவராத்திரி விழா நிகழ்வானது அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதன் சிறப்பு,மகிமை,மகத்துவத்தை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் முகமாக கோலம் போடும் நிகழ்வு காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.
இதில் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ஏஸ்.சுஜித்திரா,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி, ஆலய தர்மகர்த்தாக்கள், இந்து சமய நிறுவனங்கள்,காரைதீவு பிரதேச செயலகம் என்பன பங்குபற்றின இதில் பங்குபற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்