குச்சவெளியில் தேர்தலில் வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவருக்கு நான்கு இளைஞர்கள் தாக்கிய காயப்படுத்தியதால் விளக்கமறியலில்.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய நான்கு இளைஞர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் நேற்று(12) உத்தரவிட்டார்.                                நிலாவெளி, கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த 28,31,27,மற்றும் 26 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு இளைஞர்களும் குச்சவெளி பிரதேச சபைக்கு தேர்தலில் போட்யிட்ட வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டதால் அந்நபரை  நால்வரும் இனைந்து தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       சந்தேக நபர்களுக்கெதிராக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சனிக்கிழமை (10) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்