பல்வேறு போராட்டத்தின் மத்தியில் கல்வி கற்றோருக்கு உதவி

ஜெயந்தி நகரில் வசிக்கும் சாந்தகுமார் புவனேஸ்வரி குடும்பத்தினர் கடந்த ஆறு வருடங்களாக தந்தையின் இழப்பின் மத்தியில் குழந்தைகளை பல்வேறு போராட்டத்தின் மத்தியில் கற்பித்து வருகின்றார். அவரது கணவர் கிட்னி பழுதடைந்ததால் திடீர் மரணமடைந்திருந்தார். இவரது மூன்று பிள்ளைகளில் உயர்தரத்திலும், சாதாரண தரத்திலும் பெண் பிள்ளைகளும் தரம் ஆறில் ஆண் பிள்ளையும் கல்வி கற்று வருகின்றார்கள் . இவர்களது பொருளாதார வாழ்க்கை சுமையறிந்து திருமதி ஏரம்பு அன்னலட்சுமி அவர்களது ஏற்பாட்டில் சுவிஸ் வாழ் திரு கந்தசாமி ஜசிந்தன் அவர்கள் இவர்களுக்கான கற்றலுக்கான உதவியாக மாதாந்தம் ரூபா 7000 ஐ வழங்கி மானிட நேயத்திற்கு சான்றாக காணப்படுவதையிட்டு நாம் குடும்பம் சார்பாகவும் தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்