தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இனத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் – கருணா

(டினேஸ்)
எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து அக்கட்சியின் வெற்றியினை கொண்டாடும் முகமாக கிரான் பிரதேசத்தில்  ஏற்பாடு செய்யதிருந்த வெற்றிக்களிப்பு நிகழ்வின் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று நாம் கிரான் மண்ணிலே மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் கட்சி பெற்ற வெற்றியினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் அந்நிகழ்வானது எமது கட்சியின் பிரதேச இளைஞர் அணியின் தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இவ்வெற்றியினை உலகம் உண்ணிப்பான உற்றுநோக்கிக் கொண்டு உள்ளது அதன்பிரகாரம் அன்று இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜ.தே.கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது. இருந்தும் இன்று அனைத்து சிங்கள மக்களும் வாக்களித்து எமது முன்னாள் ஜனாதிபதியினை வெற்றிபெற வைத்தள்ளனர்.
அத்துடன் எமது கட்சியான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி இன்று உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கன்னித் தேர்தலில் போட்டியிட்டு ஏழு ஆசணங்களை கைப்பற்றியுள்ளோம் அது எமக்கு பாரிய வெற்றியாகவே அமைகின்றது எதிர்காலத்தில் எமது அரசியல் பயணத்தினை திட்டமிட்டுள்ளோம். அதாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர்; ஜெயம் அவர்கள் என்னுடன் பேச்சுவார்ததை நடாத்தியிருந்தார் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்று அது தொடர்பாக எனது கட்சியில் உள்ள அங்கத்தவர்கள் முன்னிலையில் பரிசீலித்து முடிவுகள் எடுக்கவுள்ளோர் முஸ்லீம்கள் கூட்டாட்சி அமைத்துள்ளனர் அது தொடர்பாக தமிழ் மக்கள தெளிவடைய வேண்டும் எனது பிரதேசங்கள் பரிபோய்க் கொண்டிருக்கின்றது அதற்கு துணைநிற்பது கூட்டமைப்பினர் இதனை மக்கள் தெளிவுபட வேண்டும் யாழ் மாவட்ட மக்கள் புரிந்து கொண்டு விரட்டியடித்துள்ளனர் ஆகையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூட்டமைப்பிற்குப் பின்னால் சென்று விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சரியானமுறையில் பதிலடி கொடுத்து எமது கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இணைந்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளவிருப்புகின்றேன்
         

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்