தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி நிக்கும் எந்தவொரு கட்சியும் ஒற்றை ஆட்சியை  ஏற்றுக்கொண்டதில்லை.

 

ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை நீக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்பது போன்று நாங்கள் அவர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும். யதார்த்தத்துக்கு புறம்பான கோரிக்கைகளை வைப்பதனால் எவருக்கும் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு ரெலோ செயலாளரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

அவர்கள் எம்முடன் பங்காளியாக இல்லாவிட்டாலும் பகையாளியாகாமல் இருக்க வேண்டும் என்று தான் கேட்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதாவது ஒரு சபையில்  வெற்றியீட்டிய உறுப்பினர்களில் ஒன்றிரண்டு பேரை வலைவீசி பிடித்து ஒரு சில உதிரிகளையும் இணைத்து நாங்கள் முதலிடம் பெற்ற எந்த ஒரு சபையை ஆவது கைப்பற்ற முடியும் என்று எந்த அரசியல் கட்சி ஆவது நினைக்குமானால் அவர்கள் அந்த திட்டத்தை இந்த வினாடியே கைவிட்டு விடுவது நல்லது.

கானொளிக்கு இங்கெ அழுத்தவும்…

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்