10 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழப்பாணத்திலிரருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கு வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து பரிசோதனை செய்த போது அவரது பயண பொதியில் இருந்து 8 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை 10 லட்சம் ரூபாய் பெறுமதியுடையது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்