புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் 13.02.2018 அன்று மாலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.வேன் சாரதி மற்றும், அதில் பயணித்தவர்கள் வேனை விட்டுக் வெளியேறியதால் தீக்காயங்கள் இன்றித் தப்பியுள்ளனர்.கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயணம் சென்றுக் கொண்டிருந்த வேளையில் வேன் தீடிரென  தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வேன் பகுதியளவிலேயே எரிந்துள்ளது.இந்த வேனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளனர்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புஸ்ஸல்லவா பொலிஸார் தெரிவித்தனர்.    n

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்