திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த வான் விபத்து: 7பேர் காயம்

திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற வான் பேரூந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வவுனியா நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஆறுபேர் பயணித்த ஹயஸ் ரக வான் பயணிகள் ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வானில் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரில் கணவனான கேதீஸ்வரன் 40வயது, மனைவி யாழினி வயது 36, மகள் ஒருவர் 7வயது, கணவனின் தயார் விஜயலட்சுமி 60வயது நான்குபேர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த மூவர் சிறுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானில் பயணித்தவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மூவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குள பொலிசாரும்  வவுனியா பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.                                   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்