இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒருவர் வைத்தயிசாலையில்  

வவுனியா இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும் இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார நிலையத்தின் உரிமையாளரின் மகன் காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியாசலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை வவுனியா இலுப்பையடியில் உள்ள வர்த்தகர்களிடம் குறித்த குழுவொன்று அச்சுறுத்தி நிதிபெறுதல் மற்றும் சிக்கரட் உட்பட பொருட்களை கோருவதாகவும் வர்த்தகர்கள் அதனை வழங்காத பட்சத்தில் மதுபோதையில் வரும் குறித்த குழுவினர் வர்த்தகர்களை தாக்குவதாகவும் அப்பகுதி வர்கத்தகர்கள் தெரிவிக்கின்றனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்