இலங்கை போக்குவரத்து சபையினால் நாட்டிற்கு 80 மில்லியன் ரூபா வருமானம்

இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் போதான இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்பட வேண்டிய தொகை எதிர்வரும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்