தாய் இறந்தது தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் பரிதாபம்

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவமனையில், தாய் இறந்தது கூட தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

கணவனால் கைவிடப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க சமீனா சுல்தானாவை, ஓஸ்மானியா மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர் அனுமதித்தார். இருந்தாலும், சிகிச்சை பலனின்றி மாரடைப்பினால் அவர் உயிரிழந்தார்.

tamilcnn.lk

அவரது மகன் ஷோய்பிடம் சமீனா இறந்துவிட்டதாக மருத்துவப்பணியாளர்களும் அங்குள்ளவர்களும் கூறியபொழுது, தனது தாய் இறந்துவிட்டதை அச்சிறுவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

மேலும், தாயின் உடலை பிணவறைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்காமல், அவரது உடலருகே படுத்து உறங்கியுள்ளான். பின்னர், சிறுவன் தூங்கிய பின்பு, அதிகாலை 2 மணியளவில், சமீனாவின் உடலை பிணவறைக்கு மாற்றி, போலீசாரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உறங்கி எழுந்த சிறுவன் தன் தாயை பற்றி கேட்டபொழுது, அவரை வேறு அறைக்கு மாற்றி வைத்திருப்பதாக கூறி சமாளித்தனர்.

இதனடிப்படையில், ஆதார் அட்டையின் உதவியால், அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்த போலீசார், அப்பெண் இறந்தது பற்றியும், அச்சிறுவனை பற்றியும் அவர்களிடம் தகவலளித்தனர்.
உடனே, மருத்துவமனைக்கு விரைந்த அப்பெண்ணின் உறவினர், அவரது உடலை பெற்றுக்கொண்டு, சிறுவனை அவர்களே பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்