12 ராசிக்காரர்களுக்குமான மாசி மாத பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான கிரகநிலை, கிரகமாற்றம், பொதுபலன், நட்சத்திரபலன் என்று மாசி மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு – சப்தம ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கியஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் கேது – லாபஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்: 13ம் தேதி – செவ்வாய்கிழமை அன்று அதிகாலை 3.32க்கு சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14ம் தேதி – புதன்கிழமை அன்று மாலை 3.46க்கு குரு பகவான் அஷ்டம் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி மாலை 3.17க்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
03-மார்ச் பகல் 12.34க்கு சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே, நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாகும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும்.

கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.
அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

அஸ்வினி: அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

பரணி: அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச்: 1, 2, 28, 29, 30
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்: 8, 9

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்