ஆரம்பமாகின்றது இலங்கையின் புதிய கிரிக்கெட் எல்.பி.எல்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் போன்ற இருபதுக்கு-20 தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கைகள் எடுத்து வந்தது.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிமுதல் செப்டம்பர் 8ம் திகதிவரை எல்.பி.எல். எனப்படும் லங்கன் பிரீமியர் லீக் (LPL) நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

tamilcnn.lk

இந்த போட்டித் தொடர் ஆரம்பிக்கும் காலப்பகுதியில் கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் தொடர்களும் நடைபெறவுள்ளது.

இதேவேளை ஆரம்பிக்கவுள்ள எல்.பி.எல். தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும், எதிரணியுடன் தலா இரண்டு போட்டிகளுடன் மோதவுள்ளது.

இந்த போட்டித் தொடரில் நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்களை அழைக்கவுள்ளதுடன், சிம்பாப்வே அணிக்கெதிரான தொடர் நிறுத்தப்படும் பட்சத்தில் பாகிஸ்தான் வீரர்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 2014ம் ஆண்டு எல்.பி.எல். போன்ற எஸ்.எல்.பி.எல். என்ற பிரீமியர் லீக் தொடரை நடத்தியிருந்தது. குறித்த தொடர் பெரியளவு பிரபலம் அடையவில்லை என்பதால் குறித்த தொடர் ஒருவருடத்துடன் நிறைவுக்கு வந்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்