இந்தியா – ஈரான் இடையே விசா கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை

இந்தியா – ஈரான் இடையே இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்புவதாக ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி கூறினார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்த அவர், ஹைதாராபாதில் உள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டார்.

tamilcnn.lk

பின்னர் செய்தியாளர் அவர் கூறியதாவது:

இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கு உரியதாகும். இதில், இந்தியாவும், ஈரானும் முக்கியப் பங்காற்ற வேண்டும். அண்மையில் ஓமன் வளைகுடா பகுதியில் திறக்கப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம், இந்தியா,ஈரான் இடையேயான வர்த்தகப் போக்குவரத்தை ஊக்குவிக்கும். ஈரான், அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது.

அவற்றை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்தவும் ஈரான் விரும்புகிறது. இதேபோல், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்த இந்தியாவும் விசா கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது என்றார் அவர். முன்னதாக, ஈரானிய கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குதுப் ஷாஹி கல்லறை வளாகத்துக்குச் சென்று ஹசன் ரெளஹானி பார்வையிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்