வறுமையில் வாடிய தாய் மகன் உடலை கல்லூரிக்கு தானம்

சத்தீஸ்கரில், இறுதிச் சடங்கு செய்வதற்கு பணம் இல்லாமல், வறுமையில் வாடிய தாய், மகனின் உடலை, மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினார்.

சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த இளைஞனின் தாய், மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவும், இறுதிச் சடங்கிற்கும், பணம் இல்லாமல் தவித்தார். இவரது நிலையை பார்த்த, அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் ஒருவர், உடல் தானம் குறித்து, அந்த தாய்க்கு கூறினார். இதை கேட்டு, நிம்மதியடைந்த அந்த தாய், தன் மகனின் உடலை மருத்துவக் கல்லுாரிக்கு தானமளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்