கரவெட்டி பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு!…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் தங்கவேலாயுதம் ஐங்கரனும், மூன்றாவது ஆண்டுக்கு கந்தன் பரஞ்சோதியும், நான்காவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
உப தவிசாளராக முதலாவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும், இரண்டாவது ஆண்டுக்கு கந்தர் ரத்தினமும், மூன்றாவது ஆண்டுக்கு நாகரத்தினம் மகாதேவனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நான்காவது ஆண்டுக்குரிய உப தவிசாளர் தெரிவுசெய்யப்படவில்லை.
கரவெட்டி பிரதேச சபையின் 31 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற தனிக் கட்சியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்