மட்டு மாநகர சபை மேயர் தெரிவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துiராயடலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பில் பேசு பொருளாக இருக்கின்ற மாநகர சபையின் மேயர் தெரிவு தொடர்பில் வெற்றியீட்டிய மாநகர சபையின் உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டதுடன் அவர்கள் மூலமாகவே மேயர் தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேயர் தெரிவு தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுமென கட்சியின் செயலாளர் இதன் போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்