வியாழனன்றே அமைச்சரவை மாறும்! – நல்லாட்சி தொடரும் என்கிறார் ரணில்…

தேசிய அரசு தொடரும் என்றும், எதிர்வரும் வியாழக்கிழைமை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தத்  தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் செயற்படவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
அதேவேளை, கூட்டரசியிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான எம்.பிக்கள் குழுவொன்று வெளியேறவுள்ளது என்றும், அந்தக் குழுவில் 20 வரையான எம்.பிக்கள் இடம்பெறலாம் என்றும் கூட்டு எதிரணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அரசியல் குழப்பம் நீடிப்பதால் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டரசா அல்லது தனியரசா என்பதுகூட இன்னும் உத்தியோகபூர்வமாக அறியமுடியவில்லை.
அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்