வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் பழைய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்று (18.02) இரவு 11.15 குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நபர் கிழக்கை சேர்ந்த வயது 33 நபரொருவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது அதில் இருந்த 2 கிலோ 10 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கைகளை எடுத்’துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்