திரியாய் மத்திய மருந்தகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு மணிக்கூடு திருட்டு

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை திரியாய் மத்திய மருந்தகத்தின்  கதவுகள் உடைக்கப்பட்டு மணிக்கூடு திருடப்பட்டுள்ளதுடன்  பொருற்கள் வீசப்பட்டுள்ளதாக  குச்சவௌி பொலிஸ் நிலையத்தில்  இன்று (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திரியாய்  மத்திய மருந்தகம்  ஏற்கனவே  ஒரு முறை உடைக்கப்பட்டு மாத்திரைகள் திருடப்பட்டதாகவும்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு   கதவுகள் உடைக்கப்பட்டு பொருற்கள் வீசப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து குற்றம் செய்தவர்களை கைது செய்ய வேண்டுமெனவும்  கதவு உடைக்கப்பட்டமை தொடர்பில் கை அடையாளத்தை பெற்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அம்மருந்தகத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் டி.சில்வா தெரிவித்தார்.
அத்துடன் போதை மருந்துகள் பாவிப்பவர்கள் மருந்தை தேடுவதற்காக வேண்டி இக்கதவுகள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகளை குச்சவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்