வீட்டு வாடகை கேட்கச் சென்ற உரிமையாளர் கொலை

 (அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் வீட்டு உரிமையாளருக்கும்,வீட்டு வாடகையாளருக்குமிடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் வீட்டு உரிமையாளர்
கத்திகுத்திற்கு இலக்காகி இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் சாம்பல்தீவு,06ம் வட்டாரத்தைச்சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41வயது)எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு வாடகைப்பணத்தை வாங்குவதற்காக சென்ற போதே வீட்டு உரிமையாளரை கத்தியால் வெட்டியதாகவும் அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று திங்கக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருடைய  சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கத்தியால் வெட்டிய வீட்டு வாடகையாளரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்