கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்

போலி கனேடிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கட்டார் விமான நிலையம் ஊடாக கனடா செல்ல முயற்சித்த குறித்த இலங்கையர் விமான நிலைய அதிகாரிகளினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தின் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, உப்புவெலி பிரதேசத்தை சேர்ந்த சரவனமுத்து தங்கவேல் என்ற 62 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உதவிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்ற விசாரணை பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்