வவுனியா வைததியசாலைகளை பார்வையிட்ட வடக்கு சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிவதற்காக நேற்று திடீர் விஜயமொன்னை வட மாகாண சுகாதார அமைச்சர் மேற்கொண்டார்.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் அழைப்பின் போரில் திடீர் விஜயத்தினை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு நிலையமான வைகறை, ஸ்ரீராமபுரம் வைத்தியசாலை, சிதம்பரபுரம் பிரதே சவைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை என்பவற்றுக்கு விஜயம் செய்து குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது வட மாகாண சபை உறுப்பினர் ஜா.ரி.லிங்கநாதன் அவர்களும் கலந்து கொண்டதுடன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்