கடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்

கடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்-சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் (வீடியோ)
-மன்னார் நிருபர்-
 
(21-2-2018)
 
மன்னார் மாவட்டம் பேசாலை முருகன் கோவில் பகுதியை அந்தோணி மரியதாஸ் என்ற மீனவர் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது நடுக்கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது.
 
-இதன் போது குறித்த படகில் இருந்த அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் மற்றும்  அன்றன்  ஆகிய இருவரும் கடலில் மூழ்கினர்.
 
அன்றன் மூச்சுத்திணறி கடலில் மூழ்கியுள்ளார். அந்தோணி மரியதாஸ் என்ற மீனவர்  பிளாஸ்ரிக் கேனை பிடித்துக் கொண்டு நீந்தியுள்ளார்.
 
இதன் போது குறித்த மீனவரை   கண்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் குறித்த மீனவரை கடலில் மீட்டு ராமேஸ்வரத்தில் கரைசேர்த்தனர்.
 அவர் மீது வழக்கு பதிவு செய்த இராமேஸ்வரம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
அவரை விசாரித்த நீதிபதி அவர் மீனவர் என்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி முகாமில் வசிக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்கியிருக்க அனுமதியளித்தார். 
 
அவர் இங்கு வந்து 3 மாதங்கள் ஆகியும் தன்னை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பாததால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பதாக கூறி தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குகுமாறு இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டார்.
 
குறித்த மீனவரை விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியாளர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்