ஓரு இரவுக்கு பல லட்சங்கள் ! சத்தமின்றி நடந்து கொண்டிருக்கும் கன்னித்தன்மை வியாபாரம்

கன்னித்தன்மை தொடர்பான சர்ச்சை காலங்காலமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கிறது, அதிலும் பெண்களது கன்னித்தன்மை குறித்த கட்டுக்கதைகளை நிறையவே கடந்து வந்திருப்போம். இதுவும் கன்னித்தன்மை தொடர்பான ஓர் கட்டுரை தான். ஆனால் சற்று வித்யாசமானது. பெண்களின் கன்னித்தன்மைக்கு சந்தையில் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதன் பின்னால் மிகப்பெரிய வியாபார கூட்டணி ஒன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பணம் பத்தும் செய்யும் என்பது ஒரு புறம் உண்மையென்றால் பணமிருந்தால்…பணத்திற்காக என்று எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று அடுத்த தலைமுறை தயாராகி நிற்கிறது. ரஷ்யாவில் இயங்கிக் கொண்டிருக்கிற கன்னித்தன்மை வியாபாரம் பற்றி….

#1 ரஷ்யாவில் இருக்கக்கூடிய பணக்கார ஆண்கள் கன்னிகழியாத பெண்களிடத்தில் தான் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்களிடம் பணத்தை வாங்கி இளம்பெண்களை அனுப்பி வைக்க குறிப்பாக கன்னித்தன்மை உள்ள பெண்களை அனுப்பி வைக்க ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

#2 இதற்கான முகவர்கள் ஆன்லைன் மூலமாக பெண்களை பிடிக்கிறார்கள், மறுக்கும் பெண்களிடத்தில் பணத்தாசை காட்டி வலையில் விழச் செய்கின்றனர். இதே போல எதிர்தரப்பில் கன்னித்தன்மையுடன் பெண் வேண்டும் என்று கேட்பவர்களிடத்தில் செலவு அதிகம் என்று சொல்லி பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, பெண்களும் தங்களை கன்னித்தன்மையுடையவர்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

#3 இதனை செயல்படுத்த நெட்வொர்க் ஸ்பெசலிஸ்ட்,டீலர்,ரெக்ருட்டர் என பல பெயர்களில் ஆட்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் கன்னித்தன்மைக்கு நாளுக்கு நாள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

#4 பெரும்பாலான பிஸ்னஸ் போலவே இதிலும் நடுவில் இருக்கக்கூடிய மிடில் மேனுக்கு அதிக பணம் கிடைக்கிறது. இதற்காக விளம்பர யுத்திகளும் பல கையாளப்படுகின்றன.

#5 பெண்களின் வயதிற்கேற்ப ஆயிரங்களிலிருந்து லட்சக்கணக்கில் விலையை நிர்ணயிக்கிறார்கள். ஓர் இரவுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கையில் பணம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

#6 பணம் வாங்குவது மற்றும் கொடுப்பது என பங்கு பிரிப்பதில் பெரும்பாலும் பெண்களுக்கும் டீலர்களுக்கும் பெரும் சண்டை தொடர்ந்து நடக்கிறது. இதனால் சில பெண்கள் இது போன்ற ஏஜெண்ட்களை நம்பாது, தாங்களே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். அதோடு அவர்களே தங்களை அணுகிடும் ஆண்களைப் பொருத்து விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.

#7 சமூக ஊடகங்களிலும் தங்களுக்கான ஆண்களை பிடிப்பதில் இவர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர். முதலில் குறைவான விலைக்கு வலை விரித்து, பின்னர் பெருந்தொகையை பறிக்கிறார்கள். இங்கு இதுவரை கொடுக்கப்பட்டதில் அதிகபட்ச விலை பதினேழு லட்ச ரூபாய்! ஒரே ஒரு இரவுக்கு 17 லட்சம்.

#8 பணத்தாசை பிடித்தவர்கள், பணத்திற்காக எதையும் செய்யத் துணிகிறார்கள் என்று அந்தப் பெண்களை கேலி பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் அவர்களின் இன்னொரு பக்கத்தை பார்க்கவேண்டியது அவசியமாகிறது. இது போன்ற வேலையில் ஈடுபடும் பெண்கள் குடும்ப பொறுப்புக்களை சுமப்பவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கும் மருத்துவ செலவுகளுக்குமே பெரும்பாலும் இந்த தொழிலுக்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

#9 கன்னிப் பெண் என்று சொன்னால் அவர்களுக்கு குறைந்தது ஒரு இரவுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரையில் சராசரியாக கொடுக்கிறார்கள். இது நிர்ணயிக்கப்பட்ட விலையாக இருந்தாலும், அவர்களது வயது, நிறம்,தோற்றம் என பலவற்றையும் கணக்கில் கொண்டே பணத்தை தருவதாக சொல்கிறார்கள்.

#10 இங்கு வரக்கூடிய ஆண்கள் பெரும்பாலும் தங்களை விட உயரம் குறைவான பெண்களையே அதிகம் விரும்புகிறார்கள். அதோடு பதினேழு வயதுள்ள பெண் என்றால் உடனே ஒ.கே. சொல்லிவிடுகிறார்களாம். இவர்களிடத்தில் சராசரி தொகையான மூன்று லட்சத்தையும் தாண்டி பணம் வசூலிக்கப்படுகிறது.

#11 கன்னிப் பெண்கள் என்று தங்களிடம் காட்டப்படும் பெண்கள் உண்மையிலேயே கன்னிதானா என்று அறிய விரும்பும் ஆண்களுக்கு பெண்களின் மருத்துவ அறிக்கை கொடுக்கப்படுகிறது, அதற்கும் தனிக்கட்டணத்தை வசூலிக்கிறார்கள். சில நேரங்களில் இதிலிருக்கக்கூடிய பெண்களுக்கு பொய்யான கன்னித்தன்மை மருத்துவ அறிக்கை கொடுக்க மருத்துவர்களுக்கும் பணம் செலவழிக்கவேண்டியுள்ளதாம்.

#12 இருப்பதிலேயே இது மிகக் கொடுமையானது, தங்களை கன்னித்தன்மை கழியாதவர்கள் என்று காட்டுவதற்காக பல பெண்கள் தங்களது பிறப்புறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களாம்! தங்களிடம் வருகிற ஆண்களை ஏமாற்றுவதாய் நினைத்து இவர்கள் மேற்கொள்ளும் இந்த அறுவை சிகிச்சை பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் சத்தமின்றி நடந்து முடிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்