மரண தண்டனை: தீர்ப்பை கேட்டதும் தஷ்வந்த் செய்தது இதுதான் !

7 வயது ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்துக்கு நேற்று நீதிபதி வேல்முருகன் தூக்குத்தண்டனை வழங்கினார்.

தீர்ப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த தஷ்வந்த் பொலிசாரையும் அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான், கடும் கோபத்தில் கெட்ட வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதியை நோக்கி, பொலிசும், வழக்கறிஞர்கள் சொல்வதையும் நம்ப வேண்டாம், அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என கூறியிருக்கிறார்.

பொலிசாரோ வெற்றிப் புன்னகையுடன் கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள், வெளியே கூடியிருந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதைக் கொண்டாடினார்கள்.

tamilcnn.lk

தீர்ப்பு குறித்த சில விவரங்கள்

கடத்தலுக்காக அவனுக்கு முதலாவது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவரைத் தூக்கிச்சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

வேண்டுமென்றே ஒரு பெண்ணின் உடையைக் களைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஆதாரங்களை அழித்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

POCSO சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஆக குற்றவாளி தனது மீதி வாழ்நாள் முழுவதையும் சிறையில்தான் கழிக்கவேண்டியிருக்கும்.

இந்த தண்டனைகளையும் அறிவித்த பின்னர், 7 வயது ஹாசினியைக் கொலை செய்த குற்றத்திற்காக தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கினார்.

தண்டனை விவரங்களைக் கேட்ட உடன் கோபத்தில் நீதிபதியைப் பார்த்து “எக்ஸ்யூஸ் மீ” என்று உரத்த குரலில் கத்தினான் தஷ்வந்த்.

ஆனால் நீதிபதி அதைப் பொருட்படுத்தாமல் தீர்ப்பு பேப்பர்களை எடுத்துக்கொண்டு அமைதியாக சென்று விட்டாராம்.

அதன் பிறகுதான் அவன் பொலிசாரையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துள்ளான்.

தீர்ப்பு வழங்கப்பட்ட நேற்றைய தினம் அவனது தந்தையும் சகோதரரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்