நாளை இலங்கை வரவுள்ள முன்னாள் போராளி; நடக்க போவது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை சர்வதேச எதிர்ப்புகளின் மத்தியிலும் நாளைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாளை நாடுகடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மேற்படி சாந்தரூபன் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடியுள்ளார். ஆனாலும் அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர் தற்போது ஆஸியின் குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

tamilcnn.lk

இதனிடையே அவரை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு அங்கே ஆபத்து உள்ளது எனத் தெரிவித்து அவ்வாறு செய்யவேண்டாம் என ஐ.நா அகதிகள் ஆணையம் அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் இந்தக் கோரிக்கையை அவுஸ்திரேலியா அடியோடு நிராகரித்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா அவரை நாளைய தினம் பெப்ரவரி 22 அன்று நாடுகடத்தவுள்ளதாக முடிவெடுத்திருந்தது.

சாந்தரூபன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 19 வயதில் இணைந்து இனியவன் என்ற பெயரில் இயங்கியவர் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாந்தரூபன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கே சித்திரவதை செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் அவுஸ்திரேலியத் தமிழர்கள் மெல்பேர்ன் புறநகர்ப் பகுதியான Dandenongஇல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்