கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி; காரணம் இது தான்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், திருமணத்திற்கு பிறகும், கணவன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரின் பிறப்புறுப்பை வெட்டி, அதனை கழிவறையில் வீசிய மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamilcnn.lk

பஞ்சாப் மாநிலம், ஜோகிந்தர் பகுதியில் ஆசாத் சிங் மற்றும் சுக்வந்த் கவுர் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தனது கணவன் ஆசாத், பிற பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக மனைவி சுக்வந்த் சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்துள்ளது.

tamilcnn.lk

நேற்று (20-02-2018) இரவு ஆசாத் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, கணவனின் மீது ஆத்திரத்தின் உச்சியிலிருந்த மனைவி அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த கணவனின் பிறப்புறுப்பை சுக்வந்த் கத்தியால் துண்டித்து அதனை கழிவறையில் போட்டுள்ளார். இதனையடுத்து, இரத்த வெள்ளத்தில் மிதந்த ஆசாத் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். ஆசாத் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சுக்வந்த் கவுர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவனின் அத்துமீறிய நடவடிக்கையால் மனைவியே அவரது பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்