ஐ.தே.க வசமிருந்து. முக்கிய அமைச்சுகள் பறிபோகுமா?

தேசிய அரசாங்கத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறலாம் என அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சரவை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படலாம் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை தேசிய பொருளாதார சபை ஊடாக தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொருளாதாரத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவிகள் மற்றும் நீதி அமைச்சு என்பனவற்றில் மாற்றம் ஏற்படலாம் என்று அறியக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, அமைச்சரவை மாற்றம் இந்த வாரத்துக்குள் இடம்பெறலாம் என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்