வடமராட்சி கால்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை மகா வித்தியாலய அணி வெற்றி

வடமராட்சி கல்விவலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை மகா வித்தியாலய அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.

கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த அரையிறுதி ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து உடுத்துறை மகா வித்தியாலய அணி மோதியது.

tamilcnn.lk

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று மோதி கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது

இரண்டாவது பாதியாட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் உடுத்துறை மகா வித்தியாலய அணியின் கசிதன் தட்டிக்கொடுத்த பந்தை கௌதமன் கோலாக மாற்றினார். அதுவே ஆட்டத்தின் ஒரே கோலுமாக அமைய முடிவில் உடுத் துறை மகா வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்