18 வயது இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த மர்ம நபர்கள்

இந்தியாவில் 18 வயதான இளம்பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் நேற்றிரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

18 வயது பெண்ணொருவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சைக்கிளில் சென்றார்.

காய்கறிகளை வாங்கிவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பரா சக்வார் என்ற இடத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

வலியால் துடித்த அப்பெண்ணை மீட்க உடனடியாக யாரும் வராத நிலையில் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்