ஸ்ரீதேவி கருவுற்று இருந்தார்; வெளியாகும் பல உண்மைகள்

80-களில் முதன் முறையாக மிதின் சக்ரபூர்த்தி தனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருக்கும் உறவை குறித்து வாய் திறந்தார். ஜாக் உதன் இன்சான் (1984) என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கும் ஏற்பட்டதாக அறியப்பட்டது. ஆயினும், கூட அவர்கள் இருவரும் இது குறித்து அப்போது வெளிப்படையாக எங்கும் வாய் திறந்து பேச வில்லை.

இதில் வியப்பு என்னவெனில், மிதுன் ஏற்கனவே யோகீதா பாலி என்பவரை திருமணம் செய்தவர் ஆவார். ஏற்கனவே திருமணம் ஆயிருந்தாலும் கூட அது மிதுனை ஸ்ரீதேவி மீது காதல் கொள்ள ஒரு தடையாக இருக்கவில்லை.

 

கிசுகிசுக்கள்!

அந்த காலக்கட்டத்தில் இவர்கள் இருவரை குறித்து வெளியான கிசுகிசுக்கள் அனைத்தும் இவர்கள் இருவரையும் வலுவாக இணைய செய்தன. இதற்கு இடையே போனி கபூர் ஸ்ரீதேவியுடன் நெருக்கும் காண்பிக்க முயன்ற போதிலும் கூட அது தோல்வியில் தான் முடிந்தது.

போனிக்கு ராக்கி!

ஒருமுறை மிதுனுக்கும் போனி கபூர் மீதான சந்தேகம் எழுந்த காரணத்தால், மிதுன் மீதிருந்த தனது காதலை நிரூபிக்க போனி கபூருக்கு ஸ்ரீதேவி ராக்கி கட்டினார் என்றும் செய்திகள் வெளியாகின. இதை ஸ்ரீதேவியே கூறியிருந்தார் என்றும் அந்நாட்களில் தகவல்கள் வெளிவந்தன.

திருமணம்!

இந்த காலக்கட்டத்தில் தான் 1985ல் மிதுனும், ஸ்ரீதேவியும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது பாலிவுட்டில் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்வது ஒரு வளர்ந்து வந்த கலாச்சாரமாக காணப்பட்டது. 80-களில் தர்மேந்திரா – ஹேமா மாலினி, ராஜ் பாப்பர் – ஸ்மிதா பாட்டில் என பலர் இரண்டாம் திருமணத்தை ஊராரிய செய்துக் கொண்டிருந்தனர்.

தற்கொலை!

அப்போது தான் மிதுன் இரகசியமாக ஸ்ரீதேவியை திருமணம் செய்துக் கொண்டார் என்ற செய்தி அறிந்து, யோகீதா தற்கொலைக்கு முயன்றார் என்றும். காப்பாற்றப்பட்ட பிறகு, அவரது இரண்டாம் திருமணத்தையும் தான் ஏற்றுக் கொள்கிறேன். மிதுனுடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாக யோகீதா கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

அதிர்ச்சி!

மிதுன் விவாகரத்து ஆனவர் என்று கருதி வந்த ஸ்ரீதேவிக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ஆம்! மிதுன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவே இல்லை. இது குறித்து எதுவும் ஸ்ரீதேவியிடம் கூறவும் இல்லை. இதனால், மிதுன் மீது கோபம் கொண்டார் ஸ்ரீதேவி.

பிரிய மனமில்லை…

தனது முதல் மனைவி யோகீதாவை பிரிய மிதுனுக்கு மனமில்லை. இதனால் மனக்கசப்பு ஏற்படவே மிதுனும், ஸ்ரீதேவியும் 1988ல் விவாகரத்து செய்துக் கொண்டனர். மிதுன் மீண்டும் தனது முதல் மனைவி யோகீதாவுடன் இணைந்து வாழ துவங்கினார். இவர்கள் இருவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் என்பது, இவர்கள் இருவருக்கும் மூன்றாவது மகன் பிறந்த போது அறியவந்தது.

போனி ரீ-என்ட்ரி!

அப்போது தான் மீண்டும், போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையே காதல் என்ற செய்திகள் வெளியாக துவங்கின. அப்போது போனி கபூர் ஏற்கனவே மோனா கபூர் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றிருந்தார். (மகன் அர்ஜுன் கபூர்; மகள் அனுஷ்லா கபூர்)

கர்ப்பம்!

அப்போது செய்திகளில் போனி- ஸ்ரீதேவி இடையேயான உறவு குறித்து வெளியான செய்திகளை புரளி என்று கூறி வந்தார் ஸ்ரீதேவி. ஆனால், ஸ்ரீதேவி கருவுற்று முதல் மகள் ஜான்வி பிறந்தார். அப்போது தான் தாங்கள் இருவரும் ஏற்கனவே இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாக ஸ்ரீதேவி – போனி கபூர் வெளிப்படையாக கூறினர்.

ஸ்ரீதேவி போனி கபூர்!

அதன் பிறகு போனி கபூர் இல்லத்தார் ஸ்ரீதேவியை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இல்லறம் மிகவும் மகிழ்ச்சிகரமாக மாறியது. இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பிள்ளைகள்.

போனி கபூர் ஒவ்வொரு முறை பேட்டியில் கூறும் போதும்,’ஸ்ரீதேவியால் முடியாதது என்று அதுவும் இல்லை. அவர் ஒரு எல்லையற்ற கலைஞர்.’ என்று மிகவும் பெருமையாக பேசுவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்