முல்லைத்தீவில் ஏற்றப்பட்ட புதிய கொடி

முல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் நந்திக்கடல் களப்பில் 22 அடி உயரமான சிவப்பு கொடியொன்று நேற்று ஏற்றப்பட்டுள்ளதாக வெள்ளமுள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நந்திக்கடல் களப்பு ஊடான வட்டுவாகால் பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த கொடியை சிலர் ஏற்றிவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் 200 மீற்றரான வட்டுவாகால் பாலம், உரிய முறையில் நிர்மாணிக்கப்படாததால் அந்த வீதி ஊடாக பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக களப்பு ஊடாக உரிய முறையில் பாலத்தை அமைத்துக்கொடுக்குமாறு மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்