காதல் தோல்விக்கு காரணமாக இருந்த பெண்ணின் முடியை வெட்டிய காதலன்

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பிறிதொரு பெண்ணின் தலைமுடியை வெட்டிய இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதல் தொடர்பு முறிய காரணமாக இருந்த பெண் என நினைத்து வேறு பெண்ணின் முடியை வெட்டிய சம்பவம் ஒன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய இளைஞர் ஒருவர் பேருந்துக்குள் சென்று 19 அங்குலம் வரை பெண்ணின் முடியை வெட்டியுள்ளார். தனது காதலி கூறிய உருவத்தை போன்ற உருவம் கொண்ட வேறு பெண் ஒருவரு இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

tamilcnn.lk

எனினும் இவ்வாறு முடி வெட்டப்பட்ட பெண் தனது காதலி கூறிய பெண் அல்ல என பின்னரே அவர் அறிந்து கொண்டுள்ளார். நேற்று முன் தினம் 12.30 மணியளவில் பயாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் முடியை வெட்டிய இளைஞனை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

21 வயதான பெண்ணின் தலை முடியை வெட்டிய இளைஞன் தப்பி ஓடுவதாக பேருந்து சாரதி, பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியிடம், குறிப்பிட்டுள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பிரதேச மக்களின் ஆதரவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவரது சட்டை பையில் இருந்து தலைமுடி மற்றும் கத்தரிக்கோலினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பலபிட்டிய பிரதேசத்தின் பிரதான பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்பதாகவும், தான் பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாகவும், தமது காதல் தொடர்பு குறித்து காதலியின் தாயாரிடம் பெண் ஒருவர் தகவல் வெளியிட்டதாகவும், இதனால் தமது காதல் முறிவுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தாயரிடம் தகவல் வெளியிட்ட பெண்ணின் அடையாளங்களை தனது காதலி கூறியதாகவும், அவரை தான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை எனவும், குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மொரட்டுவைக்கு சென்று திரும்பி வரும் போது காதலி கூறி உருவம் கொண்ட பெண்ணை கண்டதாகவும், அவரை பழிவாங்குவதற்காக அந்த இடத்திலேயே கத்தரிக்கோல் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எல்பிட்டிய நோக்கி சென்ற பேருந்தில் அவரது முடியை வெட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தனது காதலி கூறிய பெண்ணின் முடியை வெட்டமால் வேறு பெண்ணின் முடியை வெட்டியதாகவும், இளைஞன் தெரிவித்துள்ளார். இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்