கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் வழக்கு மீண்டும் விசாரனை

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் நோக்கத்தை Crown நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கை தமிழரின் கொலை வழக்கு ஜோர்தான் ஆட்சி காலத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கனடா உச்ச நீதிமன்றத்திடம் Crown நீதிமன்றம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

tamilcnn.lk

அவரது 21 வயதான மனைவி அனுஜா பாஸ்கரன் கொல்லப்பட்டதாக சிவலோகநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. கொலை வழக்கிலிருந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனபாலசிங்கம் விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்து கொள்ளப்பட்டமையினால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் ஒரு புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவசியம் Crown நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளைத் தற்காலிகமாக நிறுத்துவதோடு, குறித்த இலங்கையரை விசாரணைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்படலாம். இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்படைப்பு ஒப்பந்தங்கள் ஒன்றும் இல்லை. இதனால் விசாரணைக்கு கட்டளையிடப்பட்டாலும் கூட, அவர் சட்டத்தை எதிர்கொள்ள அவரை கனடாவுக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான விடயம் என தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்