பிரித்தானியா இளவரசிக்கு ஞானஸ்நானம்

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்து கொள்ள இருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் கேன்டர்பரி பேராயர் தலைமையில் இந்த சடங்குகள் நடைபெறும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மேகன் மார்க்கல் ஆங்கிலிகன் என பேராயரால் அறிவிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மேகன் மார்க்கல் யூதரான திரைப்பட தயாரிப்பாளர் Trevor Engelseon என்பவரை முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் மார்க்கலின் தந்தை மற்றும் தாயார் இருவரும் புராட்டஸ்டன்ட் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நிலையில் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொள்வதால் மேகன் மார்க்கல் ஆங்கிலிகன் திருச்சபையின் வழக்கப்படி ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள உள்ளார்.

இந்த விழாவில் மெக்ஸிகோவில் இருக்கும் மேகனின் தந்தை கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. மட்டுமின்றி கலிபோர்னியாவில் உள்ள மேகனின் தாயாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொள்வதற்காக மேகன் மார்க்கல் ஆங்லிகன் என மாறத் தேவையில்லை. இருப்பினும் ராணியின் நம்பிக்கை இது என்பதால் அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஞானஸ்நான சடங்குகள் நடைபெற உள்ளது என தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்