போனி கபூரின் புதிய வாக்கு மூலம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார். அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் ஸ்ரீதேவி. இவரின் மரணத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ரீதேவியின் இறப்பிற்காக அவர்களது இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவி மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. மேலும், தற்போது போனி கபூர் ஸ்ரீதேவி மரணம் குறித்து வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதில், மனைவி ஸ்ரீதேவியை விட்டு 2 முறை தான் வெளிநாடு சென்றுள்ளேன். அன்று மும்பைக்கு திரும்பியதும், ஸ்ரீதேவி என்னை மிஸ் செய்கிறேன் என்று கூறினார். அப்போது நான் திரும்ப துபாய் போகும் விஷயத்தை அவரிடம் கூறவில்லை. 3:30 மணிக்கு மாலை துபாய் விமானத்தில் துபாய் சென்றேன். துபாய் நேரப்படி மாலை 6.20 க்கு ஓட்டல் அறைக்கு சென்றேன்.

போனி கபூரின் புதிய வாக்கு மூலம்; சில விஷயங்கள் மாறியுள்ளது;

என்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்து ஸ்ரீதேவியின் அறைக்குள் சென்றேன். நான் துபாய் வருவேன் என தெரியும் என ஸ்ரீதேவி என்னிடம் கூறினார். பிறகு என்னை கட்டி அணைத்து, முத்தமிட்ட ஸ்ரீதேவி, அரைமணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். ஷாப்பிங் போகலாம் என என்னை அழைத்தார். ஆனால் நான் ரொமான்டிக் டின்னர் சாப்பிட செல்லலாம் என கூறினேன். அதற்கும் சம்மந்தம் தெரிவித்த ஸ்ரீதேவி குளித்துவிட்டு வருகிறேன் என்று சென்றார். நான் அவர் வரும்வரை டிவி பார்க்க தொடங்கிவிட்டேன். 20 நிமிடங்கள் ஆகியும் அவர் வரவில்லை.

இன்று சனிக்கிழமை, 8 மணிக்கு மேல் ஓட்டலில் கூட்டம் அதிகமாகி விடும்என்று கத்தினேன். எந்த பதிலும் வரவில்லை, இதுவரை இப்படி நடந்ததில்லை என்பதால் பாத்ரூம் கதவை தட்டினேன். அதற்கும் பதில் இல்லை. கதவு உள்ளே பூட்டப்படாமல் இருந்தது, நான் உள்ளே சென்று பார்க்கும் போது குளியல் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது, ஸ்ரீதேவியின் தலை முதல் கால் வரை தண்ணீரில் மூழ்கியிருந்தது. பயந்துபோன நான் அவரை எழுப்ப முயற்சித்தேன். ஆனால் ஸ்ரீதேவி எழுந்திருக்கவில்லை. என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

போனி கபூரின் புதிய வாக்கு மூலம்; சில விஷயங்கள் மாறியுள்ளது;

முன்பு நமக்கு தெரிந்த வரை, போனி கபூர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார் என்று தான் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் கூட சொல்லப்பட்டது. ஆனால் தற்போது போனி கபூர் கூறியதில் ஸ்ரீதேவியின் குளியலறை உள்புறம் தாழிடவில்லையாம். ஷாப்பிங் என்ற வார்த்தை முன்பு வந்த விளக்கத்தில் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது போனி கபூர் கூறுவது ஷாப்பிங் போகலாம் என்று ஸ்ரீதேவி கேட்டார். இரவு ரொமான்டிக் டின்னெரை முடித்துவிட்டு ஷாப்பிங் போகலாம் என்று இவர் ஸ்ரீதேவியிடம் கூறியதாக சொல்கிறார். போனி கபூர் வாயில் இருந்து கதவை உடைத்துவிட்டு என்று வராத வார்த்தை எப்படி செய்திகளில் வந்தது. ஸ்ரீதேவியுடன் அந்த அறையில் இவர் மட்டும் தானே இருந்தார். இவர் சொல்லாத ஒன்றை எதற்காக செய்திகளில் பரப்ப போகிறார்கள், என்று சில ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்