எதிர்வரும் மாகாணசபை தேர்தல் கலப்பு முறையில்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளன.இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது.எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.அத்துடன், கலப்பு தேர்தல் முறையின் மூலம் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இனம்காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்