கொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் மொஹமட் நிஹார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான சிராஸ் யூனுஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன், ஹலோ எவ்.எம். முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி எப்.எம்.சரீக் சிறப்பதிதியாக கலந்து கொண்டதுடன், பாடசாலை ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்