உடன் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலுக்குவரும் வகையில் கண்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினமும் நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்